இன்றைய ராசிபலன் | Raasi Palan 19-02-2017

இன்றைய ராசி பலன்
✅மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப் படுவதை முதலில் நிறுத்துங் கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.
✅ரிஷபம்
ரிஷபம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளை கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். புது திட்டத்தில் ஒன்று நிறைவேறும் நாள்.
✅மிதுனம்
மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். அமோகமான நாள்.
✅கடகம்
கடகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். கனவு நனவாகும் நாள்.
✅சிம்மம்
சிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.
✅கன்னி
கன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங் களின் நட்பு கிட்டும். உற வினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். தைரியம் கூடும் நாள்.
✅துலாம்
துலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
✅விருச்சிகம்
விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
✅தனுசு
தனுசு: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் களால் சங்கடங்கள் வரும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப் படுத்தி பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
✅மகரம்
மகரம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். 
✅கும்பம்
கும்பம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.
✅மீனம்
மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*