Iraivankadu Bhagavathy Amman Temple Vellore

Iraivankadu Bhagavathy Amman Koil Vellore
 Iraivankadu Bhagavathy Amman Koil Sethuvalai Vellore

கேரளா எல்லையிலிருக்கும் “சோட்டானிக் கரை பகவதி அம்மன்” கோவிலுக்கு சென்ற நான்.அங்கு ஒருவரை சந்தித்தேன்,அவர் என் குடும்பத்தில் நடந்தது நடந்து கொண்டு இருப்பது நடக்க இருப்பது என எல்லாவற்றையும் அப்படியே சொல்லிவிட்டார்.அதற்கு பரிகாரமும் செய்து கொடுத்தார்.

அன்று முதல் இன்று வரை எங்கள் குடும்பத்தில் இன்னல்கள் நீங்கி நல்லதே நடக்கிறது.கேரளா சாமியாரிடம் அழைத்துச் சென்றார்  உட்காருங்கள் தம்பி நல்லா இருக்கிறிர்களா குடும்பத்தில் அனைவரும் நன்றாக இருக்கிறார்களா என்று லாரி டிரைவரிடம் விசாரித்தார்.பிறகு பூஜை அறைக்குள் சென்று திரும்பி வந்து என் முகத்தைப் பார்த்து ஏற்கனவே என்னைப்பார்த்து போலவும்,என் பக்கத்து வீட்டுக்காரரைப் போலவும் எனக்கு நடந்ததையும், எங்கள் குடும்பத்தில் நடந்ததையும் அப்படியே சொல்லிவிட்டார்.

அப்பொழுது கூடவே மற்றொன்றும் சொன்னார் தம்பி எனக்கென்று சொந்தம் என்று சொல்லிக் கொள்ள இந்த சோட்டானிக்கரை பகவதியைத் தவிர வேறு யாரும் இல்லை என் மனதில் உள்ள பாரத்தை யாரிடமாவது இறக்கிவிடனும் நான் கற்றவித்தையை எனக்கு 98 வயதாகிரது நான் இறப்பதற்குள் இந்த வித்தையை யாருக்காவது கற்றுத்தர வேண்டும் என்ற மனவேதனையுடன் இருந்தேன்.உன்னைப் பார்த்ததும் நீ அதற்குத் தகுதியானவன் என்று மனவேதனையுடன் இருந்தேன்.இவைகளையெல்லாம் கற்றக் கொள்ள ஒரு 6 மாதமாவது ஆகும் நீ என்னுடன் இருந்து பொறுமையாக இதை கற்றுக் கொள்வாயா? என்று அவர் கேட்டார்.

நானும் அதை சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டேன்.அன்று முதல் நானும் அந்த வயதான மந்திரவாதி தாத்தாவும் உறவுக்காரர்களை போல நெருங்கிப் பழகினோம். சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவர் கற்ற வித்தைகளையும் செய்த லீலைகளையும் எனக்கு கற்றுக் கொடுத்தார்,பிறகு ஒருநாள் அந்த வயதான பெரியவரை தேடி காரைக்குடியிலிருந்து அவருடைய உறவினர் முவர் வந்து சாகும் நேரத்தில் கூட ஏன் இந்த வைராக்கியத்துடன் நீ இருக்கிறாய் எங்களை மன்னித்து விட்டு நீங்கள் எங்களுடன் விட்டிற்கு வாருங்கள் என்று அழைத்தனர்.

வயது ஆகிவிட்டது என்பதாலும் பெரியவரும் ஒப்புக் கொண்டார்.அவர்கள் சென்றதும் என்னை அந்தப் பெரியவர் அவரருகே அழைத்து என்னைகட்டிப் பிடித்து என்னுடைய பாரங்கள் அனைத்தையும் உன்னுடன் தருகிறேன் உன்னால் 10 குடும்பங்களாவது வாழட்டும் யாரையும் பழிவாங்காதே என்று என்னிடம் கூறி ஒரு கிண்ணத்தில் தண்ணீரும், ஒரு கிண்ணத்தில் எண்ணையும்,ஒரு கிண்ணத்தில் நெருப்பும் வைத்துக்கொண்டு அதன்மீது என்னை நல்லதை தவிர யாருக்கும் கெடுதல் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்யச் சொன்னார். நானும் சத்தியம் செய்தேன்.பிறகு அவரிடம் இருந்த ஓலைச்சுவடி செப்புத்தகடுகள் ஒரு பகவதி அம்மன் பஞ்சலோக சிலை இவையனைத்தையும் என்னிடம் கொடுத்து இன்னும் ஒருமணி நேரத்தில் எனது உறவுக்காரர்கள் எல்லாம் வந்து விடுவார்கள் அவர்கள் வந்தால் இதை உன்னிடம் தரமாட்டார்கள் எனவே அவர்கள் வருவதற்குள் நீ சென்றுவிடு என்று எனக்கு ஆசீர்வாதம் செய்தார்.நானும் அவரது பாதங்களை தொட்டு வணங்கி விட்டு வருகிறேன் என்று சொல்லி புறப்பட்டு வந்துவிட்டேன்.

அவர் கொடுத்த பொருளையெல்லாம் எங்கள் விட்டில் வைத்து பூஜை செய்து கொண்டு வந்தேன். சாப்பிட்டு படுத்தேன் இரவு 10.30 இருக்கும். 5 மணிக்கு எழுந்து பார்த்தால் எங்கள் விட்டின் சுவற்றில் 4 அடி உயரத்தில் புற்று ஒன்று தோன்றி இருந்தது.7 மணி நேரத்தில் எப்படி வளர்ந்தது என்ற ஆச்சர்யம் அன்று முதல் அந்த புற்றுக்கு தினமும் பூஜை செய்து வந்தேன். வாழும் வீட்டில் புற்று இருந்ததால் குடும்பத்தில் நல்லது கெட்டது இருக்கும் நீங்கள் ஒரு பக்கமாக ஒதுங்கியிருங்கள் நாங்கள் உங்களுக்கு பூஜை செய்கிறோம்.

அவர் வேண்டிக் கொண்ட சில நாள்களிலேயே இப்பொழுது கோவில் இருக்கும் அந்த நதிக்கரையில் ஒரு வேப்பச்செடி இருந்தது. அந்த இடத்தில் ஒரு புற்று வளர ஆரம்பித்தது.சிறிது காலம் கடந்த பின்பு இங்கு வந்து இங்குள்ள வேப்பமரத்தையும் புற்றையும் சுற்றினால் நல்லது நடக்கிறது என்று அனைவரும் வர ஆரம்பித்தனர் .ஒரு நாள் இரவு 2 மணி இருக்கும் எனக்கு ஒரு கனவு வந்தது.அதில் நான் தான் உன் குடும்பத்தில் வந்து அமர்ந்துள்ளேன் 8 வகைகளை கொண்ட காளி உருவத்தில் பகவதி என்னும் பெயரோடு   வந்துள்ளேன்.

உன் கையில் எனக்கு ஒரு கோவில் கட்டு அதற்குண்டான வழிகளை நான் வகுத்து தருகிறேன் என்று என் கனவில் சொல்ல நான் அதை என் அண்ணனிடமும் அம்மாவிடமும் சொல்ல. அதற்கு என் அண்ணனும் ஒப்புக் கொள்ள அன்றே போய் ஓலை முங்கில் எல்லாம் எடுத்துவந்து ஒரு கொட்டகை அமைத்து அதில் ஒரு சுவாமி படம் வைத்துக் கொடுத்தார்,அதன் பிறகு என்னை அறியாமலே வரும்போகும் பக்கதர்களுக்கு நான் அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தேன்.அப்போது வேலூரை சேர்ந்த 4பக்தர்கள் கூடி நாங்கள் வேண்டிக்கொண்டோம் அது எங்களுக்கு நன்றாக நடந்துவிட்டது நாங்கள் நால்வரும் சேர்ந்து இந்த ஓலை கொட்டகை எடுத்து விட்டு சீட்  போட்டு தருகிறோம் என்று என்னிடம் கேட்டனர். நானும் அதற்கு ஒப்புக்கொண்டு கடவுள் உங்ககளுக்கு நல்லதை செய்து இருந்தால் நீங்கள் வேண்டிக்கொண்டது நேர்த்திக் கடனை செய்யுங்கள் என்று கூறினேன்.சிறிது காலம் சென்றது.

ஆலய சிறப்பு அம்சங்கள்:

அம்மன் அருளால் அமாவாசை  மற்றும் பௌர்ணமி தினத்தன்று பகல் 12.00 மணியளவில் அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூஜையில் கலந்துக்  கொண்டு தங்கள் குடும்பத்தில் நீண்ட நாட்களாக தடைபட்டு வரும் திருமணம், தீராத வியாதி, அமைதியின்மை, போன்றவைகள் நீக்கி பிள்ளைபேறு அடைவதும் திருமணம் நடைபெறுவதும் மன அமைதி பெற்றுவாது அம்மனின் அருள் பெற்ற பக்தர்களின் நம்பிக்கை. ஞாயிறு, செவ்வாய்  மற்று வெள்ளிக்  கிழமைகளிள் அம்மன் அருள்வாக்கு கூறுவதும் அம்மனின் சிறப்பு அம்சமாகும்.

அடிகளார் அம்மன் அருள்வாக்கு கூரும் நாட்கள்:

வெள்ளி செவ்வாய் , மற்றும் ஞாயிறு – காலை  7 மணிக்குள் அருள்வாக்கு முன்பதிவு செய்யப்படும்.

நேரம் – காலை : 8:30 முதல் நண்பகல் 2 மணி வரையில் மட்டுமே அன்னையின் அருள்வாக்கு கூறப்படும்.

நாள் ஒன்றுக்கு 10 நபர்களுக்கு மட்டுமே அன்னையின் அருள்வாக்கு வழங்கபடும்.

பரிகார பூஜைகள்:

  • பேய்,பிசாசு ,காட்டேரி ,முணி,பில்லி சூனியம் மற்றும் ஏவல் பிரச்னை
  • குழந்தை பெறுவதில் இன்மை
  • திருமண தடை நீங்க.
  • வியாபாரத்தில் விறுக்கதியடையா
  • கணவன் மனைவி உறவுகள் மேம்பட
  • குழந்தைகளின் கல்வி அறிவு வளர்ச்சி மேம்பட
  • சகலவிதமான வியாதிகள் குணமடைய
  • இல்லத்தில் அமைதி நிலவ
  • எதிர்கால நன்மைகள் மற்றும் வேலைவாய்ப்பு பெற
  • வேலைவாய்ப்பு தடை நீங்க
  • கடன் தொல்லை பிரச்னைகள் தீர

தின பூஜைகள்:
  • காலை 8 மணி பூஜை
  • நன்பகல் 12 மணி பூஜை மற்றும் 
  • மாலை 6 மணி பூஜை
வாராந்திர சிறப்பு பூஜைகள் – செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, இத்தினங்களில் அருள்வாக்கு நடைபெரும்.
மாதாந்திர பூஜைகள்  – அமாவாசை அன்று நண்பகல் 12 மணி அளவில் சிறப்பு உச்சிகால பூஜை நடத்தப்படும்.
ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயம் அமைந்துள்ள இடம்:

வேலூர் to பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, வேலுரிலிருந்து 12 கி.மீ தொலைவில் செதுவாலை அடுத்த இறைவன் காடு பகவதி அம்மன் திருக்கோவில் பாலற்றங்கறையில் அமைந்துள்ளது.



முகவரி:

தி. ஸ்ரீ சம்பத் அடிகளார்,
ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயம்,
இறைவன் காடு  – 632104,
வேலூர்,
தமிழ் நாடு, இந்தியா.

Mobile No : 9443104200

Email id : contact@eraivankadubhagavathyamman.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*