Petrol and Diesel Price hikes, Petrol 89Paise,Diesel 86Paise

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன.

அதன்படி மாநில வரிகள் தவிர்த்து, பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 89 காசுகளும், டீசல் ஒரு லிட்டருக்கு 86 காசுகளும் நேற்று உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் 15–ந்தேதியும் இதேபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 34 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 37 காசுகளும் அதிகரிக்கப்பட்டது, நினைவு கூரத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*