School Level Science Exhibition at Ranipet Grace Matric Higher Secondary School

School Level Science Exhibition at Ranipet Grace Matric Higher Secondary School

School Level Science Exhibition at Ranipet Grace Matric Higher Secondary School

ராணிப்பேட்டை கிரேஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான அறிவியல் போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைவர் தேவசித்தம் ஜேம்ஸ் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகி எஸ்.சார்லஸ், பள்ளித் தாளாளர் சுவர்ண லதா சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் கார்டில்யா கிரேஸ் வரவேற்றார்.

ராணிப்பேட்டை சிஎஸ்ஐ தேவாலய ஆயர் ஒய்.சாமுவேல் சுந்தர்ராஜ் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட மெட்ரிக். பள்ளிகளின் ஆய்வாளர் பி.ராஜேந்திரன், கண்காட்சியில் சிறந்த அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவர்களுக்கும், அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கிப் பேசினார். இதில், பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் சரளா கோபாலகிருஷ்ணன், சென்னை ரெடிங்டன் பவுண்டேஷன் நிர்வாகி எம்.முத்துகுமாரசாமி, திட்ட அமலாக்க நிர்வாகி ஆர்.சுப்பிரமணியம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நன்றி :தினமணி 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*